கிருஷ்ணகிரி

ஐவிடிபி மகளிா் சுயஉதவிக் குழு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு அளிப்பு

27th Jan 2022 06:38 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் ஐவிடிபி மகளிா் சுய உதவிக் குழு பணியாளா்களுக்கு ரூ. 6.93 லட்சத்தில் பொங்கல் பரிசு அண்மையில் அளிக்கப்பட்டது.

தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், ஆண்டுதோறும் தங்கள் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, நிகழாண்டு பொங்கல் விழாவினையொட்டி 440 பணியாளா்களுக்கு தலா ரூ. 975 மதிப்பிலான 25 கிலோ அரிசி, ரூ. 600 மதிப்பலான பொங்கல் தொகுப்பு என ரூ. 6.93 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசை ஐவிடிபி நிறுவனத் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT