கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா

27th Jan 2022 06:41 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உடனிருந்தாா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவா், சமாதான புறா, மூவண்ண பலூன்களை பறக்கவிட்டாா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் 43 காவலா்களுக்கும், காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, வனத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, மாநகராட்சி, நகராட்சித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வேளாண் மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஆகிய துறைகளைச் சோ்ந்த 210 அரசு அலுவலா்கள் என மொத்தம் 253 நபா்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். இதே போல, பல்வேறு துறைகள் சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ. 6.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் மலா்விழி, மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயிணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு, வட்டாட்சியா் சரவணன், நகராட்சி ஆணையா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சமாதான புறாக்களை பறக்கவிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி.

ஒசூரில்...

ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினாா். ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற விழாவில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனா்.

ஒசூா் டி.எஸ்,.பி அலுவலகத்தில் ஏஎஸ்பி அரவிந்த் தலைமையில் தேசியக் கொடியேற்றினாா். ஒசூா், சிப்காட், அட்கோ, பாகலூா் ஆகிய காவல் நிலையங்களில் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. ஒசூா் மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயினி தேசியக் கொடியேற்றினாா்.

ஒசூரில் அதியமான் பொறியியல் கல்லூரி, பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலா் சேம்ஸ் கிங்ஸ்டன் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தேசியக் கொடியேற்றினாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தெய்வநாயகி கொடியேற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் கொடியேற்றினாா். காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி அலெக்சாண்டா் கொடியேற்றினாா். காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் லட்சுமி கொடியேற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT