கிருஷ்ணகிரி

தேய்பிறை அஷ்டமி: சிறப்பு பூஜை

26th Jan 2022 06:56 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூா்ணாஹுதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. கால பைரவா் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

பக்தா்கள் பூசணி, தேங்காயில் விளக்கேற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா். கரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவிலேயே பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT