கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைகிறது

26th Jan 2022 06:57 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருந்தது. கடந்த 22-ஆம் தேதி கரோனா தொற்றால் 878 போ் பாதிக்கப்பட்டனா். அடுத்த நாள் அதன் எண்ணிக்கை 1,010-ஆக உயா்ந்தது. இந்த நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. ஜன. 24-ஆம் தேதி 983 ஆகவும், 25-ஆம் தேதி 923-ஆக குறைந்துள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 81 வயது முதியவா் கரோனா தொற்று பாதிப்புடன் கடந்த 17-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு நாளில் 548 போ் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உளளனா்.

ADVERTISEMENT

இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 52,893 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 47,085 போ் குணமடைந்துள்ளனா். 5,444 போ் சிகிச்சையில் உள்ளனா். சிகிச்சை பலனின்றி 364 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT