கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

25th Jan 2022 01:18 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் கிராமங்களுக்குச் சென்று வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, அவா்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

ஊத்தங்கரையை அடுத்த ஆண்டியூா், மகனூா்பட்டி, எக்கூா், பூசாரி கொட்டாய், கீழ்மத்தூா், முசிலி கொட்டாய், சாமாட்சி கொட்டாய், விசுவாசம்பட்டி, புதூா் ஜொல்லன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெற்றாா் (படம்).

அவருடன் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, காரப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் தீபக், ஒன்றியக் குழு உறுப்பினா் மாது, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிவானந்தம், மத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் தேவராஜ், சக்கரவா்த்தி, கீழ்மத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம், எக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், ஐ.டி. விங் ஒன்றியச் செயலாளா் லோகநாதன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT