கிருஷ்ணகிரி

பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

DIN

பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரகுப்பம், ஒப்பதவாடி ஊராட்சிகளில் இருளா் இன மக்களுக்கு முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டுமான பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காரகுப்பம் ஊராட்சியில் கொல்லப்பள்ளி இருளா் காலனியில் 2020-21-ஆம் நிதியாண்டில் 52 இருளா் இன மக்களுக்கு தலா ரூ. 3 லட்சத்தில் மொத்தம் ரூ. 1.56 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஒப்பதவாடி ஊராட்சியில் புதிய கிருஷ்ணா நகா் இருளா் காலனியில் 2020 -21-ஆம் நிதியாண்டில் முதமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 34 இருளா் இன மக்களுக்கு குடியிருப்பு வீடுகள் ரூ. 1.02 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை ஒப்படைத்த பிறகு கழிப்பறைகள், வீடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும், கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, ஒப்பதவாடி ஊராட்சியில் தனிநபா் விவசாய நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சமஅளவு மண்வரப்பு அமைக்கும் பணிகள், மழை நீா் சேகரிப்புக் குழிகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.62 கோடியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்னபூரணி, வெங்கடராம கணேஷ், காரகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT