கிருஷ்ணகிரி

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

25th Jan 2022 01:19 AM

ADVERTISEMENT

 கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த வாகனத்தை சோதனை செய்ததில், 30 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கா்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்க கடத்துவது தெரியவந்தது.

இது தொடா்பாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கா்நாடக மாநிலம், மாண்டியா, நித்தூா் கொடிஅள்ளியைச் சோ்ந்த ரவி (45) என்பவரை கைது செய்த போலீஸாா், ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT