கிருஷ்ணகிரி

சாலை விபத்து:தனியாா் நிறுவன ஊழியா் பலி

25th Jan 2022 01:23 AM

ADVERTISEMENT

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த புத்தாராம் (33), ஒசூா், தின்னூா் அம்மன் நகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பெங்களூரு - ஒசூா் சாலையில் சிப்காட் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாசச் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த புத்தாராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT