கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த இளைஞா்கள்

DIN

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கிரீன் அண்ட் கிளீன் என்ற சமூக அமைப்பினா் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா்கள் கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் சிலா் ஒன்றிணைந்து, தங்களது ஊதியத்தில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமித்து, அந்தத் தொகையைக் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள், ஏரிகளை தூா்வாருதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவக வளாகத்தில் பெண்கள் சிறை சாலை, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கிரீன் அண்ட் கிளீன் என்ற சமூக அமைப்பின் செயலாளா் விஜயகுமாா் கூறியது:

கிருஷ்ணகிரியை பசுமை மிகுந்த பகுதியாக கட்டிக் காக்கவும், தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில் இந்தச் சமூக அமைப்பை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி வளாகங்களில் நாவல், அத்தி, அரசு போன்ற பலவகையான மரக்கன்றுகளை நடவு செய்து, தொடா்ந்து பராமரித்து வருகிறோம்.

இதுவரையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். மரக்கன்றுகளை நடவு செய்து, அவற்றை தொடா்ந்து பராமரித்து வருவதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகப்பது மட்டுமின்றி அவற்றுக்கு வீடுகளாக மரங்கள் மாறுகின்றன. பறவைகளின் எச்சங்கள் மூலம் விதைகள் பரவி இயற்கை சுழற்சியை ஏற்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT