கிருஷ்ணகிரி

அனுமதியின்றி கிரானைட் கற்கள் கொண்டு வந்த லாரி பறிமுதல்

DIN

பேரிகை அருகே அனுமதி இன்றி கிரானைட் கற்களைக் கொண்டுச் சென்ற லாரியை கனிம வளப் பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி கனிம வளப் பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் குழுவினா் பேரிகையில் வேப்பனப்பள்ளி சாலையில் முதுகுறுக்கி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் நின்ற ஒரு டாரஸ் லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி 17 கிரானைட் கற்கள் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இது குறித்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT