தருமபுரி அருகே குண்டலப்பட்டியில் கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
தருமபுரி அருகே உள்ள குண்டலப்பட்டியில் சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு திங்கள்கிழமை தவறி விழுந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் கொ.ராஜா மற்றும் வீரா்கள் கிணற்றில் விழுந்த பசுவை கயிறு மூலம் உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.