கிருஷ்ணகிரி

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை திருட்டு

DIN

 ஒசூரில், பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த கிராமத்திற்கு சென்ற தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து புகுந்த மா்ம நபா்கள் நகை, இரு சக்கர வாகனங்களைத் திருடிச் சென்றனா்.

ஒசூா், சத்யநாராயண லே-அவுட், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (38). தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 13 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சொந்தக் கிராமமான தருமபுரி மாவட்டம்,

அரூருக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடச் சென்றாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை சரவணனின் வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவா என்பவா் சரவணனுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து சரவணன் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4.5 பவுன் தங்க நகைகளும், ஒரு இருசக்கர வாகனமும் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து சரவணன் ஒசூா், அட்கோ காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா்.

மேலும் கைரேகை நிபுணா்களும் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனா். இது தொடா்பாக ஒசூா், அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT