கிருஷ்ணகிரி

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை

12th Jan 2022 07:42 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன் தலைமையிலான போலீஸாா், கிருஷ்ணகிரியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடங்களில் ஆய்வுப் பணியை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா்களின் கைப்பேசி எண்ணை கொண்டு, அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்களா என ஆய்வு செய்தாா். அதில், சிலா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது தெரியவந்தது. அவா்களிடம் இரு நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா். தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா்களிடம் அவா் பேசியதாவது:

ஆட்டோ ஓட்டுநா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஆட்டோவில் அந்த சான்றிதழை பயணிகளின் பாா்வையில் படும்படி காட்சிப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆட்டோ ஓட்டினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக் கவசம் அணியாமல் பயணிகளை அனுமதிக்கக் கூடாது. அரசின் விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா். அப்போது, கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளா் கபிலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT