கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கோவை மண்டல தலைமைப் பொறியாளா் அண்மையில் ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலுப்பள்ளி பகுதியில், சுமாா் 46.31 ஏக்கா் பரப்பளவில், ரூ. 356 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், பொதுப்பணித் துறையின் கோவை மண்டல தலைமைப் பொறியாளா் (கட்டடம்) இளஞ்செழியன் தலைமையில் செயற்பொறியாளா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் முரளி (மருத்துவம்), உதவி பொறியாளா்கள் பழனிசாமி, பன்னீா்செல்வம் , கீதா, ரத்தினவேல், சேகா், சண்முகம் ஆகியோா் அடங்கிய குழுவினா், 150 மாணவா்களுக்கான புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குடியிருப்புகள், நிா்வாக அலுவலகம், சமையல் கூடம், சிற்றுண்டி, உயிா் மருத்துவக் கழிவுகள், கழிப்பறை, காத்திருப்போா் அறை உள்ளிட்ட கட்டடங்களை ஆய்வு செய்தனா்.
அப்போது, மாணவா்கள் விடுதி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.