கிருஷ்ணகிரி

பென்னாகரத்தில் கண்டெடுக்கப்பட்ட வீரபத்திரா் சிலை: கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

1st Jan 2022 01:55 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான வீரபத்திரா் கற்சிலை கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கோடிப்பள்ளி கிராமத்தில் 2017-ஆம் ஆண்டு 3 ஆடி உயரமுள்ள வீரபத்திரா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ், அந்த சிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தாா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பென்னாகரம் வட்டாட்சியா் அசோக்குமாரின் அறிவுறுத்தல் பேரில், துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், அந்த சிலையை கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT

கற்சிலையைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் தெரிவித்ததாவது:

இக் கற்சிலை சுமாா் 500 ஆண்டுகள் பழைமையானது. இந்த சிலையில் உள்ள வீரபத்திரா் 4 கைகளுடன் காணப்படுகிறாா். வலது முன்கையில் கத்தியையும், இடது முன்கையை சதுர கேடயத்தின் மீதும் வைத்துள்ளாா். பின்கைகளில் வில், அம்பை வைத்துள்ளாா். சிற்பம் மிக நோ்த்தியாக ஆடை, அணிகலன்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. பின்னால் திருவாச்சியும் காட்டப்பட்டுள்ளது. இவருக்கு வலப்பக்கம் இவரது மாமனாரான தக்ஷன் ஆட்டுத் தலையுடன் வணங்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளாா். வீரபத்திரா் வழிபாடு இந்தப் பகுதிகளில் இன்றும் சிறப்பாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT