கிருஷ்ணகிரி

ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம்உறுப்பினா்களை சோ்க்க வேண்டும்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

1st Jan 2022 01:53 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் தலா 25 ஆயிரம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, மாவட்ட பொருளாளா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 3 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 25 ஆயிரம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும். அதிக உறுப்பினா்களைச் சோ்க்கும் 3 நபா்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். விரைவில் தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் மாநகர பொருளாளா் சென்னீரப்பா, ஒன்றியச் செயலாளா்கள் சின்ன பில்லப்பா, சீனிவாசலு ரெட்டி, திவாகா், ரங்கநாத், வெங்கடேஷ், பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஞானசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT