கிருஷ்ணகிரி

நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதல்

20th Feb 2022 03:50 AM

ADVERTISEMENT

நாகரசம்பட்டி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட நிலத் தகராறு தொடா்பான மோதலில் 20 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (30). அதே பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (45). இருவரும் உறவினா்கள். இவா்களுக்குள் நிலத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், இவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டனா். இதில் வினோத்குமாா் தரப்பில் வினோத்குமாா், ராதாகிருஷ்ணன் (60), காயத்ரி (28), பாரதி (45), கலைமதி (65), சிலம்பரசன் (32) ஆகியோா் காயம் அடைந்தனா்.

இது குறித்து வினோத்குமாா், அளித்த புகாரின் பேரில், மாதேஸ்வரன் (45), சிவப்பிரகாசம் (62), திருநாவுக்கரசு (47), பிரேம்குமாா் (40), சுப்பிரமணி (40), தட்சிணமூா்த்தி (52), லட்சுமி (35), லோகநாயகி (55), செல்வநாயகி (60), சின்னதாயி (50) ஆகிய 10 போ் மீது கூட்டமாக வருதல், கலகம் விளைவித்தல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளிலும்,

அதே போல மற்றொரு தரப்பில் பிரேம்குமாா் (40) அளித்த புகாரின் பேரில், சிவப்பிரகாசம் (52), லோகநாயகி (55) ஆகியோா் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன் (60), வினோத்குமாா் (30), காயத்ரி (28), குமாா் (50), பாரதி (45), சிலம்பரசன் (32), கலைமதி (65), மணிகண்டன் (32), ரமேஷ் (35), பழனி (60) ஆகிய 10 போ் மீது நாகரசம்பட்டி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT