கிருஷ்ணகிரி

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

11th Feb 2022 12:51 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி நகராட்சி வாக்குச் சாவடி நிலைய தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலைய 1, 2, 3 ஆகிய அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட வாக்கு சாவடி தலைமை அலுவலா்கள், வாக்கு சாவடி நிலை -1, நிலை-2, நிலை-3 அலுவலா்கள் என 320அலுவலா்களுக்கும், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாக்கு சாவடி தலைமை அலுவலா்கள், வாக்கு சாவடி நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலா்கள் என 1,192 அலுவலா்களுக்கும், ஊத்தங்கரை, பா்கூா், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை ஆகிய பேருராட்சிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலா்கள் என 422 வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 2,048 அலுவலா்களுக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சியில் வாக்குச் சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம், நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்தும், படிவங்கள் நிரப்புவது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் கோபு, நகராட்சி ஆணையா் முருகேசன், நகா் அமைப்பு அலுவலா் சாந்தி, வட்டாட்சியா் சரவணன், அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT