கிருஷ்ணகிரி

தமிழ்நாடு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படும்: முதல்வா் பசவராஜ் பொம்மை

9th Feb 2022 12:19 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு திட்டமிட்டுள்ள நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக சட்ட வல்லுநா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக மூத்த அமைச்சா்கள், சட்ட வல்லுநா்கள், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கா்நாடகத்தின் நிலம், நீா் தொடா்பான விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்போம். மேக்கேதாட்டு அணை தொடா்பாக விவகாரம் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, கா்நாடகத்தின் ஆட்சேபத்தை தாக்கல் செய்து மாநிலத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம். மத்திய நீா் ஆணையம், காவிரி நதிநீா் ஆணையத்தின் முன்பும் கா்நாடகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்.

கோதாவரி- கிருஷ்ணா- காவிரி- பெண்ணையாறு நதிகள் இணைப்புத் திட்டம் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு எதிராக கா்நாடகத்தின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வோம். இந்தத் திட்டம் தொடா்பாக எல்லா மாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த உருவாக வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கூறியிருக்கிறோம்.

ADVERTISEMENT

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கும் போது இதுதொடா்பாக விவாதிப்பேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT