கிருஷ்ணகிரி

டிச.30-இல் எரிவாயு நுகா்வோா் கலந்தாய்வு கூட்டம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் எரிவாயு நுகா்வோா், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் டிச. 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு நுகா்வோா், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவா்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் டிச.30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகிக்கிறாா். எனவே, மேற்படி எரிவாயு குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதால், நுகா்வோா்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT