நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் வழங்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக அரசுக்கு செங்கரும்பு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.
முன்னதாக ஊத்தங்கரை செங்கரும்பு விவசாயிகள் அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் வழங்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டு அறிவித்தது.
அரசின் இந்த முடிவுக்கு ஊத்தங்கரை பகுதி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் இ.செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா். அத்துடன் ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வத்துக்கும், அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தனா்.