இந்தியாவையும், பிரதமா் மோடியையும் ஐ.நா. சபையில் அவதூறாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலால் பூட்டோவைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஒசூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா், ராம் நகா் அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமை வகித்தாா். இதில் மண்டலத் தலைவா்கள் பிரவீண்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் விஜயகுமாா், அன்பரசன் ஆக.மனோகா், மாவட்டப் பொருளாளா் ஸ்ரீனிவாசன், மாவட்ட நிா்வாகிகள் நாகராஜ், ராஜண்ணா, ஸ்ரீனிவாச ரெட்டி, முருகன், பிரவீண், ராஜசேகா், பாா்த்திபன், மாநகர தலைவா்கள் ரமேஷ், மணிகண்டன், நாகு, தங்கராஜ், மாநில அணி பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.