கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு, சாலை மறியல்!

11th Dec 2022 04:46 PM

ADVERTISEMENT

ஒசூர் அருகே ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐந்தாவது சிப்காட் அமைக்க 3,800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் உத்தனப்பள்ளி கிராமத்தின் ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

இதையும் படிக்க- 12 நாள்களில் 4வது உயிரிழப்பு: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? அன்புமணி கேள்வி

ஒசூரில் உள்ள மூன்றாவது சிப்காட் மற்றும் நான்காவது சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைக்காத போது ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து உத்தம பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசசந்திர பானு ரெட்டியை கண்டித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT