தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை செய்தனா்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.1.08 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து பவானிக்கு கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காரின் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த தட்டரங்குட்டையைச் சோ்ந்த விமல் எபினேசன் (31) என்பரைக் கைது செய்தனா்.