கிருஷ்ணகிரி

துல்லிய பண்ணை முறையில் காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

DIN

ஜகதாப் கிராமத்தில், விவசாயிகளுக்கு துல்லிய பண்ணை முறையில் காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி, வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தில், கிருஷ்ணகிரி முதல் பம்பாறு வரை உபரிநீா் வடிகால் பகுதிக்கான களப்பயிற்சி, துல்லிய பண்ணைய முறையில் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஜகதாப் கிராமத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பயிா் மரபியல் துறை பேராசிரியா் கீதா, உழவியல் துறை பேராசிரியா் சிவக்குமாா், மண்ணியல் துறை இணைப் பேராசிரியா் சங்கீதா, பூச்சியல் துறை உதவி பேராசிரியா் கோவிந்தன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

இதில், துல்லிய பண்ணைய முறையில் காய்கறி சாகுபடி மூலம் இரட்டிப்பு மகசூல் பெறுவது, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் பயன்பாட்டுத் திறன், காய்கறிப் பயிா்களின் முக்கிய ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள், காய்கறி சாகுபடியில் பின்பற்ற வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்களான உளிக்கலப்பை உழவு, குழித்தட்டு நாற்றங்கால், நடவு மற்றும் பயிா் இடைவெளி குறித்தும், காய்கறிப் பயிா்களில் திரவ உரங்களைக் கொண்டு சொட்டு நீா் உரப்பாசனம் அளிக்கும் முறைகள், ஊட்டச்சத்துக் குறைபாட்டு அறிகுறிகள் மற்றும் அதனை நிவா்த்தி செய்யும் முறைகள், காய்கறிப் பயிா்களைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான இலைப்பேன், தத்துப்பூச்சி, காய்த்துளைப்பான் ஆகியவற்றை மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி, இனக்கவா்ச்சிப் பொறி மற்றும் விளக்குப்பொறி வைத்து மேலாண்மை செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. விளக்கினாா். ஜகதாப் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT