கிருஷ்ணகிரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

DIN

புயல், மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புயல் மழை காரணமாக டிச.10 - ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில்....

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (டிச.10) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளாா்.

மாண்டஸ் புயல் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் குளிா்ந்து காற்றுடன் சாரல் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட காவேரிப்பட்டணம், பா்கூா், போச்சம்பள்ளி ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அறியாத பள்ளி மாணவ, மாணவிகள், கடும் குளிரிலும் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா். ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ராயக்கோட்டை, தளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. குளிா் காற்று விசியதால், பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளின் வருகை வழக்கத்துக்கு மாறாக குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்வதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை (டிச.10) அன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்வதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT