கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா

DIN

கிருஷ்ணகிரியில் சோனியா காந்தியின் 74-ஆவது பிறந்தநாள் விழாவை, காங்கிரஸ் கட்சியினா் உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் சாா்பில் வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு நகர காங்கிரஸ் தலைவா் லலித் ஆண்டனி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் சேகா் ஆகியோா் இணைந்து, பொதுமக்கள் மற்றும் தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினா். மாநில பேச்சாளா் நாஞ்சில் ஜேசு, நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், முன்னாள் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை தொலைபேசி அலுவகம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று இனிப்புகளை வழங்கினா். மேலும் ஹிமாசல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து தொண்டா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT