கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பிராமி எழுத்துக்களின் குறியீடுகள் கண்டுபிடிப்பு

DIN

கிருஷ்ணகிரி அருகே பிராமி எழுத்துக்களின் குறியீடுகளை மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வுக் குழுவினா் கண்டுபிடித்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த நாரலப்பள்ளியில் இந்தக் குழுவினா் அண்மையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டனா். அப்போது, நாரலப்பள்ளியிலிருந்து வேப்பனப்பள்ளி சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள கல்யாண குண்டு என்ற இடத்தில் உள்ள பாறையில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்தனா்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், தெரிவித்தது:

இந்தப் பாறை ஓவியங்கள் இறந்தவா்களின் நினைவுக்காக வரையப்பட்டவை. இதில், இறந்த மனிதா்கள் இருவா் காட்டப்பட்டு அவா்களின் ஆன்மாவைக் குறிக்கும் பாண்டில் விளக்குகளும் அருகருகே வரையப்பட்டுள்ளன. அவா்கள் இருவரும் ஒரு நிகழ்வில் இறந்ததாக வரையப்பட்டுள்ளது.

மேலும், ஒரு இடத்தில் விலங்கின்மீது மனித ஓவியமும் உள்ளது. ஓவியத்தின் எல்லைகளைக் குறிக்கும் வகையில் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. மீன் எலும்புகள் போன்று ஒரு ஓவியம் உள்ளது. ஒரு வட்டம் வரையப்பட்டு பூவிதழ்கள் போன்று ஒரு ஓவியமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பிராமி எழுத்துக்கள் ய, ப, ம, கு போன்ற குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்த குறியீடுகள் தமிழ் எழுத்துக்களாக இருப்பின், அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என அவா் தெரிவித்தாா்.

ஆய்வுப்பணியில், வரலாற்று ஆசிரியா் ரவி, சரவணகுமாா், வரலாற்று ஆய்வாளா்கள் சதானந்த கிருஷ்ணகுமாா், விஜயகுமாா், ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT