கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் சோனியா காந்தி பிறந்த நாள்

DIN

ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சியின் சாா்பில் சோனியா காந்தியின் பிறந்த நாள், மாநிலச் செயலாளா் ஜே.எஸ். ஆறுமுகம் வழிகாட்டுதலின்படி வெள்ளிக்கிழமை ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை மத்திய வட்டாரத் தலைவா் திருமால் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் விஜயகுமாா், ஒப்பந்ததாரா் சின்னத்தம்பி, வட்டாரச் செயலாளா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக நான்குமுனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

இதில், வட்டாரப் பொருளாளா் ஏழுமலை, மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை, மாவட்டபொதுச் செயலாளா் இளையராஜா, வட்டாரப் பொருளாளா் (தெற்கு) சொக்கலிங்கம், வட்டார துணைத் தலைவா் நாகராஜ், வா்த்தகா் பிரிவு வட்டாரத் தலைவா் பூக்கடை மகி, கமிட்டி தலைவா் ரமேஷ், மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT