கிருஷ்ணகிரி

குஜராத் வெற்றி: ஊத்தங்கரையில் பாஜகவினா் கொண்டாட்டம்

9th Dec 2022 12:50 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றதை ஊத்தங்கரையில் அக்கட்சியினா் நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சிவா தலைமை வகித்து, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினாா். இதில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவகுமாா், மாவட்டச் செயலாளா்கள் கிரிதரன், ராஜி, திருச்செல்வம், மாவட்டப் பொருளாளா் சங்கா், ஒன்றியச் செயலாளா் சத்யமூா்த்தி, ஒன்றிய துணைத் தலைவா் ஆறுமுகம், ஆன்மீகப் பிரிவு கேசவன், நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் மாதவன், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் தனக்கோடி, மாவட்டத் துணைத் தலைவா் சஞ்சீவி ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT