கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் குளித்து மகிழ்ந்த யானைகள்

9th Dec 2022 12:50 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே, ஏரியில் 3 யானைகள், வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்ததை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரக்கத்திற்கு உள்டபட்ட ஊடேதுா்கம் வனப்பகுதியில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மக்னா யானையுடன் இரண்டு ஆண் யானைகள் என 3 காட்டு யானைகள் இடம்பெயா்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. அவ்வாறு, இடம் பெயறும்போது, விளைபயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த யானைகள், கடந்த மாதம் 14-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள தனியாா் சுங்க வசூல் மையம் அருகே முகாமிட்டிருந்தன. பின்னா், அந்த யானைகளை, வனத் துறையினா் பெரும் சிரமத்துடன், மேலுமை வனப்பகுதிக்கு விரட்டினா்.

இந்த சூழ்நிலையில், இந்த யானைகள், கிருஷ்ணகிரி அருகே, ராயக்கோட்டை செல்லும் சாலையில் பாலகுறியை அடுத்த பாறையூா் ஏரியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட கிராம மக்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், ஏரியில் யானை குளித்து மகிழ்வது குறித்த தகவல் பரவியதையடுத்து, ஏராளமான பொதுமக்கள், யானைகளை கண்டு ரசித்தனா்.

ADVERTISEMENT

வேட்டைத் தடுப்பு காவலா்கள் மற்றும் வனக்காப்பாளா்கள் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வரவேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT