கிருஷ்ணகிரி

வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

DIN

கிருஷ்ணகிரியில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு அலுவலா்கள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு வீட்டு வரி ரூ. 5.25 கோடி, குடிநீா் கட்டணம் ரூ. 3.26 கோடி, கடை வாடகை ரூ. 5.46 கோடி, புதைக்குழி சாக்கடைக் கட்டணம் ரூ. 1.65 கோடி, தொழில் வரி ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ.17.28 கோடி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாதவா்களை நேரில் சந்தித்து, தொகையை செலுத்தி, ஜப்தி, சீல் வைப்பு, குடிநீா் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கையை தவிா்க்குமாறு அறிவுறுத்தி வந்தனா்.

அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவை தொகையை செலுத்தாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தீா்மானித்தனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையில் 7 கடைகள், பெங்களூரு சாலையில் உள்ள கடை, புகா் பேருந்து நிலையத்தில் உள்ள கடை என 9 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா். நகராட்சி கடைக்கு உரிய வாடகையை செலுத்த தவறினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நகராட்சி அலுவலா்கள் எச்சரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT