கிருஷ்ணகிரி

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரிப்பு தொழில் தொடங்க மானியம்

DIN

உண்ணத்தக்க நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரிப்பு தொழில் செய்ய ரூ. 10 லடசம் வரையில் மானியம் வழங்கப்படவுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆா்வமுள்ளோா், ஏற்கெனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோா், குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினா், உழவா் உற்பத்தியாளா் அமைப்பினா், உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோா் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

ரூ. 1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், இத் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை.

பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலா்மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈரமாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரக்செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருள்கள், இனிப்பு மற்றும் காரவகை தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பாா் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள் தயாரித்தல், காப்பிக்கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப்பொரி வகைககள், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுததப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்க மானியம் அளிக்கப்படும்.

ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

திட்டத் தொகையில் 10 சதவிகிதம் முதலீட்டாளா் தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். 90 சதவிகிதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். அரசு திட்ட மதிப்பீட்டில் 35 சதவிகிதம் மானியம், அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை வழங்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343 -235567 என்ற தொலைபேசியிலோ அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT