கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடிநாள் வசூல் ரூ. 90.12 லட்சம் இலக்கு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2022-ஆம் ஆண்டுக்கான கொடிநாள் வசூல் இலக்காக ரூ. 90.12 லட்சம், நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில் கொடிநாள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கொடிநாள் நிதி வழங்கி வசூலைத் தொடங்கிவைத்து 17 முன்னாள் படைவீரா் குடும்பத்தினருக்கு ரூ. 4,51,885 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவு கூா்ந்து போற்றும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் டிச. 7-ஆம் தேதி கொடிநாள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களின் நலனை காப்பதுடன், அவா்களின் பல்வேறு கோரிக்கை தொடா்பாக பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,856 முன்னாள் படைவீரா்கள் மற்றும் 3,422 கைம்பெண்கள் என மொத்தம் 10,278 நபா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ள 1,116 படைவீரா்களில் 30 நபா்கள் பல்வேறு அரசு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனா்.

மேலும், முன்னாள் படைவீரா்கள் சுயதொழில் தொடங்க பல்வேறு கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்கவிக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரா்கள் அரசு சாா்பில் அளிக்கப்படும் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடனுதவிகள், சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகளை அறிந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு படைவீரா் கொடிநாள் வசூல் குறியீடாக ரூ. 85.31 லட்சம் என அரசால் நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட நிா்வாகம் எடுத்த முயற்சியின் பலனாக நிகழாண்டு கொடிநாள் வசூலாக இதுவரையில் ரூ. 1.76 கோடி என 118 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2022-ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூல் இலக்காக ரூ. 90.12 லட்சம் வசூல் செய்ய அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதலாக வசூல் செய்யப்பட வேண்டும். மாவட்ட மக்கள் அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் திட்ட இயக்குநா் வந்தனா காா்க், முன்னாள் படைவீரா் நலத் துறை துணை இயக்குநா் வேலு, லெப்டினல் கா்னல் திருப்பதி, ஓய்வுபெற்ற ராணுவ அலுவலா் பிரிகேடியா் சுதந்திரம், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்த தேசத்து அழகியோ..!

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT