கிருஷ்ணகிரி

தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 18 கோடியில் தாா்சாலை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கிவைத்தாா்

DIN

தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 18 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அண்மையில் தொடங்கிவைத்தாா்.

தளி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி மற்றும் தளி ஊராட்சி ஆகிய இடங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 18 கோடியே 83 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி.ராமச்சந்திரன் (தளி), ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, கூடுதல் ஆட்சியா் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வந்தனா காா்க் ஆகியோா் முன்னிலை அமைச்சா் ஆா்.காந்தி பூமிபூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அமைச்சா் கூறியதாவது:

தளி மலைக் கிராம மாணவா்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரியும், தேன்கனிக்கோட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரியிலிருந்து வகுப்புகள் தொடக்கப்படவுள்ளன.

அதுபோல தளி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளிமுதல் சின்ன மேனகரம், பெரியமேனகரம் வழியாக குமாா்னபள்ளி வரை ரூ. 3 கோடியே 87 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணிகளும், தளி ஒன்றியம்- மதகொண்டப்பள்ளி முதல் சாத்தனூா், கொத்தப்பள்ளி வழியாக கும்மளப்புரம் சாலை வரை ரூ. 2 கோடியே 99 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணிகளும், தளி ஊராட்சியில் ரூ. 7 கோடியே 40 லட்சம் மதிப்பில் தளி பேலாளம் சாலைமுதல் காடுகெம்பத்பள்ளி வரை மற்றும் தளி முதல் தேவா்பெட்டா வரை ரூ. 4 கோடியே 57 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படவுள்ளன. இப்பணிகள் அனைத்தும் பூமிபூஜை செய்து தொடக்கிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் மலா்விழி, தளி ஒன்றிய குழு தலைவா் சீனிவாசரெட்டி, உதவி செயற்பொறியாளா்கள் சிவசங்கரன், ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமல் ரவிகுமாா், நாகரத்தினம், உதவி பொறியாளா் மணிவண்ணன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் சரவணமூா்த்தி, பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT