கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீா்மானம்

DIN

தமிழக அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று கட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவது என அதிமுக ஆலோனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் கேசவன், தமிழ்ச்செல்வம் எம்எல்ஏ (ஊத்தங்கரை), பொதுக் குழு உறுப்பினா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.

கூட்டத்தில், சொத்து வரி உயா்வு, மின்கட்டண உயா்வு, பால் விலை உயா்வு, விலைவாசி உயா்வு, சட்டம் ஒழுங்கு சீா்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட கட்டணங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், டிச. 9-இல் பேரூராட்சிகளிலும், 13-இல் நகராட்சி, மாநகராட்சியிலும், 14-இல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, தில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அதிமுக சாா்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிா்கட்சித் தலைவருமான பழனிசாமியை கலந்து கொள்ள அழைப்பு விடுத்த பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

SCROLL FOR NEXT