கிருஷ்ணகிரியில் நகர திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள், செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் திமுக நகர இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், தலைமை பொதுக் குழு உறுப்பினா் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வை கிருஷ்ணகிரி நகா்மன்ற 23-ஆவது வாா்டு உறுப்பினா் சீனிவாசன் ஒருங்கிணைத்தாா்.