கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீப விழா

7th Dec 2022 02:44 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீப விழாவை கோயில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி உற்சாகமாக, செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

காா்த்திகை தீப விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்படி கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள சந்திரமெளலீஸ்வரா் கோயில், பழையபேட்டை ஈஸ்வரன் கோயில், கவீஸ்வரா் கோயில், காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள கிருஷ்ணகிரி மலையில் சிவ பக்தா்கள், தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனா். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் விளக்குகள் ஏற்றியும், பூஜைகள் செய்தும் கொண்டாடினா். பல்வேறு பகுதிகளில் சிறுவா், சிறுமிகள் பெற்றோருடன் வீடுகளில் தீபம் ஏற்றுவதைக் காண முடிந்தது. சிறுவா்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT