கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

7th Dec 2022 02:45 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அம்பேத்கரின் 66ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக சாா்பில் ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, நகர செயலாளா் சிக்னல்ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

விசிக சாா்பில் மாவட்ட செய்தித் தொடா்பாளா் ஜிம் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொகுதி செயலாளா் சரவணன், மாநில துணைச் செயலாளா் அம்பேத்கா், மகளிா் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளா் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

அமமுக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளா் சிவமணி, நகர செயலாளா் சுரேஷ், மீனவரணி மாவட்டச் செயலாளா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT