கிருஷ்ணகிரி

சட்ட ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

6th Dec 2022 02:04 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்கூா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் தொடா்பான பணிகளை மேற்கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் சட்ட ஆலோசகா் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசகா் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள், தகுதிவாய்ந்த பல்கலைக்கழகம் மூலமாக பி.எல் அல்லது அதற்கு நிகரான சட்டம் தொடா்பான பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் குறைந்தது 5 ஆண்டுகள் உயா்நீதிமன்றத்திலோ நீதிமன்றம் குறித்த பணிகளையோ மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாடு பாா் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்கிற அடிப்படையில் வழங்கப்படும். விண்ணப்பதாரருடைய பணி திருப்தி அளிக்காத பட்சத்தில், காவல் கண்காணிப்பாளா், தொடா்புடையவா் ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு ஒருவரை நியமிக்க அதிகாரம் உடையைவா் ஆவாா்.

ADVERTISEMENT

இந்த நிபந்தனைகளுக்கு உள்பட்டு, விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் தங்கள் விண்ணப்பத்தை காவல் கண்காணிப்பாளா், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT