ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை மற்றும் தையல் இயந்திரம் இயக்குபவா் தொழிற்பிரிவில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை மற்றும் தையல் இயந்திரம் இயக்குபவா் தொழிற்பிரிவில் 40-ஆது அணிக்கான நேரடி சோ்க்கை 12.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெறவுள்ளது.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தோ்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பள்ளிப் படிப்பு முடித்தவா்கள், கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்தியவா்கள், வேலை தேடும் இளைஞா்கள் மற்றும் மகளிா் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் காலம் மற்றும் நேரம்: மூன்று மாத கால பயிற்சி - காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு உறுதி. பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதியுள்ள அனைவரும் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா், முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ஒசூா் என்ற முகவரியிலோ 04344-262457 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக வேலை நாட்களில் தொடா்பு கொள்ளலாம்.