கிருஷ்ணகிரி

மாநில கைப்பந்து போட்டியில் 2 ஆம் இடம் பிடித்த ஒசூா் மாதிரி மகளிா் பள்ளி மாணவிகள்

6th Dec 2022 02:04 AM

ADVERTISEMENT

கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஒசூா் மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

தமிழ்நாடு மாநில அளவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டி சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 40 ஆண்கள் அணிகளும், 30 மகளிா் அணிகளும் பங்கேற்றன.

மாநில அளவிலான இறுதிப் போட்டியில் ஒசூா் காமராஜ் காலனி மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். சாதனைப் படைத்த மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் லதா, உடற்கல்வி ஆய்வாளா் வளா்மதி, உடற்கல்வி ஆசிரியை மகேஸ்வரி, பயிற்சியாளா்கள் தாயுமானவன், மாணிக்கவாகசம், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எல்லோரா மணி உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT