கிருஷ்ணகிரி

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தின விழா

6th Dec 2022 02:03 AM

ADVERTISEMENT

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தின விழா, திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையம், பெங்களூா் வேளாண் அறிவியல் மையம் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களின் உழவா் நலத் துறை ஆகியவை இணைந்து உலக மண்வள தின விழாவை காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் பரசுராமன் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் பங்கேற்று, விவசாயிகளுக்கு இடுபொருள்கள், தென்னங்கன்றுகள், மண் பாசோதனை அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

விவசாயிகள் அதிக அளவில் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மண் வளமும் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இயற்கை விவசாய சாகுபடி தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அதிக லாபம் பெறுவதோடு மண் வளத்தையும் காக்க முடியும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகமது அஸ்லம், வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், தேசிய வேளாண் பூச்சியியல் மூலாதார அமைவகத்தின் முதுநிலை விஞ்ஞானி சம்பத்குமாா், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் மனோகரன், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பயிா் மரபியல் துறை பேராசிரியா் கீதா, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துணை இணை பேராசிரியா் சங்கீதா, வேளாண் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT