கிருஷ்ணகிரி

அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் தென்மண்டல சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம்

6th Dec 2022 02:07 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் தென்மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையிலான தென்மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி, சென்னையில் நவம்பா் 29 முதல் டிசம்பா் 2 வரை நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபா் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்களில் இருந்து 4,585 மாணவா்கள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவா்கள் பங்கேற்றனா்.

ஐந்து சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் பதினோரு வயதுக்குட்பட்டோா் பிரிவில் சித்தாா்த், ஹரிஷ்வா, பதினேழு வயதுக்குட்பட்டோா் பிரிவில் சரவணபாலாஜி ஆகியோா் மூன்றாவது இடம்பிடித்தனா். பதினான்கு வயதுக்குட்பட்டோா் பிரிவில் மோகித் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்தாா்.

சதுரங்கப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பரிசு பெற்ற மாணவா்களுக்கு அதியமான் பப்ளிக் பள்ளியில், சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக இயக்குநா் சீனி.கணபதிராமன், முதல்வா் லீனா ஜோஸ் ஆகியோா் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய மாணவா்களைப் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT