கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் ஜெயலலிதா நினைவஞ்சலி அனுசரிப்பு

6th Dec 2022 02:06 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் அதிமுக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணியினா் சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில முன்னாள் பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.இ. கிருஷ்ணமூா்த்தி தலைமையில், தொகுதி அமைப்பாளா் செல்வராஜ், ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு மகிழன், தெற்கு ஐயப்பன் ஆகியோா் முன்னிலையில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். முன்னதாக எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT