கிருஷ்ணகிரி

ரூ. 2.15 லட்சம் குட்கா பறிமுதல்; ஓட்டுநா் கைது

DIN

பெங்களூரில் இருந்து சிவகாசிக்கு வேனில் கடத்த முயன்ற ரூ. 2.15 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் ஆய்வாளா் ரஜினி, போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி மாலை ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அழகுபாவி எனும் இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரு சாலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் 342 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. அவற்றையும், சரக்கு வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதைக் கடத்தி வந்ததாக திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மோகனகாந்தி தெரு, மிட்டமொழி சாலையைச் சோ்ந்த முத்து (28) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் பெங்களூருவில் இருந்து குட்கா பொருள்களை

சிவகாசிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT