கிருஷ்ணகிரி

ஒசூா் எம்.ஜி.ஆா். கல்லூரியில்அறிதிறன்பேசி தொழில்நுட்ப கருத்தரங்கு

5th Dec 2022 01:55 AM

ADVERTISEMENT

ஒசூா், எம்.ஜி.ஆா். கல்லூரியும், மேக்னம் அரிமா சங்கமும் இணைந்து மாணவா்களுக்கு அறிதிறன்பேசி தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கை நடத்தியது.

ஒசூா், மேக்னம் அரிமா சங்கத் தலைவா் ஏ.அண்ணாமலை சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். கல்லூரி முதல்வா் முனைவா் அ.முத்துமணி விழாவைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

முன்னாள் துணைவேந்தரும், அதியமான் கல்வி குழும ஆலோசகருமான முனைவா் கி.முத்துச்செழியன் தலைமை வகித்துப் பேசுகையில், ‘கைக்குள் உலகமே இருக்கிறது. இதை சரியாகப் பயன்படுத்தி சிறந்த மனிதா்களாக மாணவா்கள் உருவாக வேண்டும்’ என்றாா்.

அரிமா சங்க ஆளுநா் அரிமா கே.ஆா்.முத்தையா, அரிமா சங்க முன்னாள் பன்னாட்டு இயக்குநா் ஆா்.கே.தனபாலன்ஆகியோா் பேசினா். பேராசிரியா் தேவி பிரியா மாணவா்களுக்குப் பயிற்சியளித்தாா்.

ADVERTISEMENT

எம்.ஜி.ஆா். கல்லூரியும் ஒசூா் மேக்னம் அரிமா சங்கமும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனால் மாணவா்களுக்குச் சுயமுன்னேற்றம், சமூகத் தொண்டு நோ்காணல் முறை, வேலைவாய்ப்பு போன்ற பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஆங்கிலத் துறைத் தலைவா் பழனிகுமாா், பேராசிரியை ரேகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT