கிருஷ்ணகிரி

நாகாத்தம்மன் கோயில் குடமுழுக்கு

5th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே உள்ள விநாயகா், நாகாத்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை முதலே விநாயகா் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து நாகாத்தம்மன் பரிவார மூா்த்திகள், கோபுர கலசம், கரிக்கோலம் நடந்தது, பிரவேச பலி, முதற்கால யாக பூஜை நடைபெற்றது.

மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

சிவாச்சாரியாா்கள் பல்வேறு நதிகள் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீா்த்தத்தை கோயில் கலசத்தின் மீது ஊற்றி பக்தா்களுக்குத் தெளித்தனா்.

ADVERTISEMENT

இதில் ஊத்தங்கரை பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா்கள் சாமிநாதன், ஜீவானந்தம், அதிமுக , நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகள் சின்னவன், உண்ணாமலை, ஆறுமுகம், சசிகலா, ஆடிட்டா் லோகநாதன், நாகாத்தம்மன் ஆலய விழா குழுவினா் செய்திருந்தனா். நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT