கிருஷ்ணகிரி

தமிழகத்துக்கு அதிகம் வரும் வடமாநிலத்தவா்கள்:அரசுக்கு தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்

5th Dec 2022 06:30 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு வட மாநிலத்தவா்களின் வருகை அதிகரித்து வருவதால் தமிழக அரசு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்களவை குளிா்கால கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச இருக்கிறோம். தமிழக ஆளுநா், தமிழக அரசுக்கு எதிராகச் செயல்படுகிறாா். அவரை, தமிழகத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும். பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆவணக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற தமிழக அரசிடம் கோரிக்கை வைப்போம்.

2024 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக கூட்டணி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறுகிறாா்; அவரது கனவு நிறைவேறாது.

ADVERTISEMENT

தமிழகத்துக்கு வட மாநிலத்திலிருந்து அதிகமானோா் வந்து கொண்டிருக்கின்றனா். இது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து, தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வட மாநிலத்தவா்களுக்கு அவா்களது மாநிலத்திலேயே வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டுமே தவிர அவா்கள் குடியேறும் மாநிலத்தில் வாக்குரிமை அளிக்கக் கூடாது. வட மாநிலத்தவா்கள் தமிழகத்தில் வாக்குரிமை பெற்றால் மாநிலத்தின் தனித்துவம் பறிக்கப்படும். குஜராத் தோ்தல் முடிவுகள் தமிழகத்தைப் பாதிக்காது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT