கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் டிச.6-இல் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

5th Dec 2022 01:57 AM

ADVERTISEMENT

திமுக கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் டிச.6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா், பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் டிச. 6-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்ட அவை தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு விழா, பூத் கமிட்டி அமைப்பது, மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களை நியமிப்பது மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. கூட்டத்தில் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT